×

தேசிய லோக் அதாலத்தில் 47,000 வழக்குகளுக்கு தீர்வு: ரூ.334 கோடி பைசல்

சென்னை: தமிழகம் முழுவதும் நேற்று நடந்த தேசிய லோக் அதாலத்தில் 47,314 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, ரூ.334 கோடி பைசல் செய்யப்பட்டது. சென்னை ஐகோர்ட், ஐகோர்ட் மதுரை கிளை, மாவட்ட நீதிமன்றங்கள், தாலுகா அளவிலான நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள சாதாரண குற்ற வழக்குகள், விபத்து இழப்பீடு கோரிய வழக்குகள், தொழிலாளர் தாவாக்கள், நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான வழக்குகள் உள்ளிட்ட வழக்குகள் நேற்று நடந்த தேசிய லோக் அதாலத்தில் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டன. அதேபோல், வழக்கு தொடர்வதற்கு முந்தைய நிலையில் உள்ள தொழிலாளர் தொடர்பான வழக்குகள், ஜீவனாம்சம் கோரிய வழக்குகள், மின்சாரம் மற்றும் குடிநீர் கட்டணம் தொடர்பான வழக்குகளும் விசாரணைக்கு எடுக்கப்பட்டன.

இதற்காக சென்னை உயர் நீதிமன்றத்தில் 8 அமர்வுகளும், மதுரை கிளையில் 4 அமர்வுகளும், மற்றும் மாவட்ட நீதிமன்றங்கள், தாலுகா அளவிலான நீதிமன்றங்கள் என மொத்தம் 467 அமர்வுகள் அமைக்கப்பட்டு வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. 47,314 வழக்குகளில் தீர்வு காணப்பட்டு ரூ.334 கோடியே 49 லட்சத்து 46,953 பைசல் செய்யப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளையில் 1,379 வழக்குகள் பட்டியலிடப்பட்டு 95 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதன் மூலம் ரூ.10 கோடியே 30 லட்சத்து 17,083 பைசல் செய்யப்பட்டது.

 

The post தேசிய லோக் அதாலத்தில் 47,000 வழக்குகளுக்கு தீர்வு: ரூ.334 கோடி பைசல் appeared first on Dinakaran.

Tags : National Lok Adalam ,Faisal ,Chennai ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED வனவிலங்குகளை வேட்டையாடிய வழக்கு:...